Headlines

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ முன்னிலை!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (04) இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகியுள்ளார்.

குறித்த ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு (Summons) அமைய, வாக்குமூலம் ஒன்றினை பதிவு செய்வதற்காகவே அவர் இன்று அங்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவர் இன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு வருகை தந்திருந்தமையை செய்தி வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *