Headlines

ஈரானிய வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் விசேட சந்திப்பு!

நியூயோர்க்கில் நடைபெற்று வரும் 81வது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் உயர் மட்ட வாரத்தின் பக்கவாட்டில், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், ஈரானிய வெளிவிவகார அமைச்சர் செய்யத் அப்பாஸ் அராக்சியை (Seyed Abbas Araghchi) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, தற்போதைய பிராந்திய மற்றும் சர்வதேச நிலவரங்கள் குறித்து இரு அமைச்சர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாக அமைச்சர் விஜித ஹேரத் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பதற்றங்களைக் குறைப்பதுடன், உரையாடல் மற்றும் இராஜதந்திர வழிகள் ஊடாகப் பிரச்சினைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காணப்பட வேண்டும் என்ற இலங்கையின் கோரிக்கையை இதன்போது அவர் மீள வலியுறுத்தினார். அத்துடன், பிராந்திய ஸ்திரத்தன்மையை விரைவில் மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தைகளைத் தொடருமாறும் அவர் இதன்போது ஊக்குவித்தார்.

ஐ.நா பொதுச் சபையின் 81வது அமர்வில் பங்கேற்றுள்ள இலங்கைத் தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கும் அமைச்சர் விஜித ஹேரத், கடந்த செப்டம்பர் 28 ஆம் திகதி பொது விவாதத்தில் இலங்கையின் தேசிய உரையை ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *