Headlines

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு அமைச்சர் விஜித ஹேரத் அதிகாரபூர்வ விஜயம்!

இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இன்று (02) முதல் செப்டம்பர் 3 ஆம் திகதி வரை அங்கு அதிகாரபூர்வ விஜயத்தை மேற்கொள்கிறார்.

இந்த விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் மற்றும் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்வதற்காக, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பல முக்கிய அமைச்சர்களை அமைச்சர் விஜித ஹேரத் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

குறிப்பாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மனித வளங்கள் அமைச்சர் டாக்டர் அப்துல்ரஹ்மான் அப்துல்மன்னான் அல் அவார் மற்றும் பொருளாதார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் அப்துல்லா பின் தௌக் அல் மர்ரி ஆகியோரை அவர் நேரில் சந்தித்து முக்கிய விவாதங்களை முன்னெடுக்கவுள்ளார்.

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சகம் விடுத்துள்ள தகவலின்படி, துபாயில் நாளை நடைபெறவுள்ள “Sri Lanka Beyond Your Dreams” நிகழ்வின் இரண்டாவது பதிப்பிலும் அமைச்சர் ஹேரத் பங்கேற்கவுள்ளார். இந்த நிகழ்வில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் டாக்டர் தானி பின் அகமது அல் சியூடியுடன் இணைந்து அவர் சிறப்பிக்கவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *