Headlines

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இன்று உரையாற்றுகிறார் விஜித ஹேரத்!

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA) அமர்வில் இலங்கையின் தேசிய உரையை இன்று (28) நிகழ்த்தவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81வது அமர்வில் கலந்துகொள்வதற்காக, தான் நேற்று (27) நியூயோர்க் சென்றடைந்ததாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தனது X (முன்னாள் Twitter) சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“ஐநா பொதுச் செயலாளர், வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் ஐநா சிரேஷ்ட அதிகாரிகளுடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளேன்,” என்றும் அவர் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.

பொதுச் சபையின் அமர்வுகளுக்கு மத்தியில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஐநா பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் (Antonio Guterres), ஐநா சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களைச் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *