போதைப்பொருள் வர்த்தகர் என சந்தேகிக்கப்படும் ஷிரான் பாசிக் உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகள் தொடர்பான வழக்கு விசாரணையை எதிர்வரும் ஒக்டோபர் 02 ஆம் திகதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இந்த வழக்கானது கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நயோமி விக்ரமசேகர முன்னிலையில் இன்று (08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே குறித்த மூவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
தற்போது பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CCIB) தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் பிரதிவாதியான ஷிரான் பாசிக், இன்றைய வழக்கு விசாரணைகளின் போது நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
