Headlines

பல மாவட்டங்களில் மழை மற்றும் பலத்த காற்று; இன்றைய வானிலை அறிக்கை.

கொழும்பு – ஜூலை 13, 2026

இன்று (13), சப்ரகமுவ மாகாணத்திலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் அது குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்.

மேலும், மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகள், வடமத்திய மாகாணம், வடமேல் மாகாணம் மற்றும் மொனராகலை, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, மன்னார் மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *