22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு, நாடாளுமன்றத்தில் இன்று (25) தீர்மானமிக்க பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக மொத்தம் 158 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். அதேவேளை, 63 உறுப்பினர்கள் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்தனர். வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் எவரும் தவிர்ந்திருக்கவில்லை (No abstentions).
முன்மொழியப்பட்ட அரசியலமைப்புத் திருத்தம் மீதான இரண்டு நாள் நாடாளுமன்ற விவாதத்தைத் தொடர்ந்து இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது.
இந்த 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக, உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை இரண்டு ஆண்டுகளால் அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
