மேல் நீதிமன்ற நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க மற்றும் மஞ்சுள திலகரத்ன ஆகியோரை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கான ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் பரிந்துரைகளுக்கு அரசியலமைப்புப் பேரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
இந்தப் பரிந்துரைகள் தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, இரு நீதிபதிகளும் எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
