Headlines

இன்று காலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இன்று (29) காலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சிறைச்சாலை அதிகாரிகளால் அவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகவே அவர் இவ்வாறு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததுடன், இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் மற்றும் உத்தரவுகளை நீதிமன்றம் இன்று அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *