2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று (22) வழங்கப்படவுள்ள நிலையில், அலுத்கடே நீதிமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
நீதிமன்ற வளாகத்தினதும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளினதும் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காகப் பல விசேட பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்குச் சதித் திட்டம் தீட்டியமை, அதற்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட 23,270 இற்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பே இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தால் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
