இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் (PHI) இன்று (24) காலை 8.00 மணி முதல் நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளது.
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) சுகாதார அலுவலகத்தில் கடமையாற்றிய பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இந்த தொழிற்சங்க நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளது.
விமான நிலைய சுகாதார அலுவலகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடான நடவடிக்கைகளை எதிர்த்தமை காரணமாகவே பொதுச் சுகாதார பரிசோதகர் பி.எச். மீகஸ்தெனிய இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் எனச் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பில் ஏற்கனவே அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், சுகாதார அமைச்சு இதுவரை எந்தவொரு தீர்வும் வழங்கத் தவறியுள்ளதாகச் சங்கம் தெரிவித்துள்ளது.
