இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் (CPC) திருத்தியமைக்கப்பட்ட புதிய எரிபொருள் விலைகள் இன்று (ஒக்டோபர் 1) முதல் அமுலுக்கு வந்துள்ளன. இதற்கமைய, ஓட்டோ டீசல், சூப்பர் டீசல் மற்றும் ஒக்டேன் 92 பெற்றோல் ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
புதிய விலை திருத்தத்தின்படி, சூப்பர் டீசலின் விலை லீற்றருக்கு 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 528 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவே இந்த திருத்தத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிகூடிய விலை அதிகரிப்பாகும். இதேவேளை, ஓட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 392 ரூபாவாகவும், ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 414 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஒக்டேன் 95 பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர் 475 ரூபாவாகவும், மண்ணெண்ணெய் லீற்றர் 285 ரூபாவாகவும் தொடர்ந்தும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தியமைக்கப்பட்ட புதிய எரிபொருள் விலைகள் பின்வருமாறு:
- ஓட்டோ டீசல்: 392 ரூபா (10 ரூபாவால் அதிகரிப்பு)
- சூப்பர் டீசல்: 528 ரூபா (50 ரூபாவால் அதிகரிப்பு)
- பெற்றோல் 92 ஒக்டேன்: 414 ரூபா (15 ரூபாவால் அதிகரிப்பு)
- பெற்றோல் 95 ஒக்டேன்: 475 ரூபா (மாற்றமில்லை)
- மண்ணெண்ணெய்: 285 ரூபா (மாற்றமில்லை)
இதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ள இந்த புதிய விலைகளுக்கு அமைவாக, லங்கா ஐ.ஓ.சி (LIOC) நிறுவனமும் தனது எரிபொருள் விலைகளைத் திருத்தியமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
