Headlines

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தார் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இன்று (09) காலை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்புத் தொடர்பில் தனது அதிகாரப்பூர்வ ‘X’ சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராஜ்நாத் சிங், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் நல்வாழ்த்துகளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தெரிவித்ததுடன், அரசாங்கம் இரண்டு ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்தமைக்கும் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாகரிகத்தின் இரட்டையர்கள், நெருங்கிய அண்டை நாடுகள் மற்றும் கடல்சார் பங்காளிகள் என்ற வகையில், இரு நாடுகளினதும் வளர்ச்சிக்கும் மக்களின் நலனுக்கும் இலங்கையும் இந்தியாவும் இணைந்து தொடர்ந்து பயணிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பிராந்தியத்தின் பாதுகாப்பு, அமைதி மற்றும் செழிப்பை கூட்டாக மேம்படுத்துவதற்கு இலங்கையும் இந்தியாவும் கொண்டுள்ள அர்ப்பணிப்பை இந்தச் சந்திப்பின் போது இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *