Headlines

நாமல் ராஜபக்ஷ செப்டெம்பர் 18 வரை விளக்கமறியலில்!

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை எதிர்வரும் 2026 செப்டெம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டதை அடுத்து, அவர் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக விமானங்களை (wide-body aircraft) கொள்வனவு செய்தமை தொடர்பில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இலஞ்சக் குற்றச்சாட்டு குறித்த தொடர்ச்சியான விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *