Headlines

நெதர்லாந்து வழங்கிய வாகனத்தை தனிப்பட்ட தேவைக்குப் பயன்படுத்திய விவகாரம்: பெளஸி 6.6 மில்லியன் ரூபாவை செலுத்த உத்தரவு.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்காக நெதர்லாந்து அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சொகுசு வாகனத்தை தனிப்பட்ட தேவைகளுக்குப் பயன்படுத்தியதன் ஊடாக, அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாகத் தீர்ப்பளித்துள்ள உயர் நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸிக்கு 6.6 மில்லியன் ரூபாவை திரட்டிய நிதியத்திற்கு (Consolidated Fund) செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

ஏ.எச்.எம். பெளஸி அனர்த்த முகாமைத்துவ அமைச்சராகப் பதவி வகித்த காலப்பகுதியிலேயே இந்த வாகனம் வழங்கப்பட்டிருந்தது.

இந்த இழப்பீட்டுத் தொகையைச் செலுத்துவதற்கு மேலதிகமாக, குறித்த வாகனத்தின் புகைப்படம் மற்றும் அதனை முறைகேடாகப் பயன்படுத்தியமைக்காக பகிரங்க மன்னிப்புக் கோரும் விளம்பரங்களை மூன்று மொழிகளிலும் பத்திரிகைகளில் வெளியிடுமாறும் முன்னாள் அமைச்சருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *