Headlines

மன்னார் வைத்தியசாலையில் 600 மில்லியன் ரூபாவில் புதிய அவசர சிகிச்சைப் பிரிவு: ஜனாதிபதி அநுர தலைமையில் பணிகள் ஆரம்பம்!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் நிர்மாணப் பணிகள், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தலைமையில் இன்று (16) ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டமானது, 600 மில்லியன் ரூபா செலவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்தப் புதிய கட்டமைப்பு மன்னார் மக்களுக்குக் கிடைக்கக்கூடிய சுகாதார சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுவதுடன், அதிநவீன மருத்துவ வசதிகளையும் இது உள்ளடக்கியிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தப் புதிய விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் நிர்மாணப் பணிகள் 2028 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் முழுமையாக நிறைவடையும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *