Headlines

வழக்கை தொடர்ந்து நடத்த கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு: முன்னாள் இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ஷவுக்கு நெருக்கடி.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ (Shasheendra Rajapaksa) உள்ளிட்ட மூன்று பேருக்கு எதிராக இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கோரி பிரதிவாதிகள் தரப்பால் முன்வைக்கப்பட்ட ஆரம்பகட்ட ஆட்சேபனைகளை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அதன்படி, தற்போதுள்ள குற்றப்பத்திரிகைகளின் கீழ் இந்த வழக்கின் விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன (Ravindra Premaratne) இன்று உத்தரவிட்டார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களுக்கு எதிராக, முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்குமாறும், வழக்கை தள்ளுபடி செய்யுமாறும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகளால் ஆரம்பகட்ட ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. எனினும், அந்த ஆட்சேபனைகளில் போதிய சட்ட ஆதாரங்கள் இல்லை எனக் குறிப்பிட்டு அவற்றை நிராகரித்த நீதிபதி, குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் வழக்கை தொடர்ந்து நடத்த உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *