இலங்கைக்கு அருகில் நிலவிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை தற்போது நாட்டை விட்டு மெதுவாக விலகிச் செல்வதுடன், அதன் தாக்கமும் படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், நிலவும் வளிமண்டல நிலைமை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ தொடர்ந்து பெய்யக்கூடும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய, மேல், சபரகமுவ, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்பதுடன், சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
வானிலை அமைப்பின் தாக்கம் குறைந்து வந்தபோதிலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
