Headlines

வரலாற்றுச் சாதனை: உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தார் இலங்கை வீரர் ருமேஷ் தரங்க

உலக ஆடவருக்கான ஈட்டி எறிதல் தரவரிசைப் பட்டியலில், இலங்கையின் நட்சத்திர தடகள வீரரான ருமேஷ் தரங்க முதலிடத்திற்கு முன்னேறி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். சர்வதேச தடகள சம்மேளனம் வெளியிட்ட புதிய தரவரிசையின்படி, அவர் இந்த உயரிய நிலையை எட்டியுள்ளார்.

அண்மையில் ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் (Commonwealth Games), ஆடவருக்கான ஈட்டி எறிதல் பிரிவில் ருமேஷ் தரங்க 89.75 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து தங்கப் பதக்கத்தை வென்றார். இந்த அசத்தலான வெற்றியே அவர் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறக் காரணமாக அமைந்தது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள தரவரிசைப் பட்டியலின்படி, இலங்கையின் ருமேஷ் தரங்க 1,354 புள்ளிகளுடன் உலகின் முதலாம் நிலை ஈட்டி எறிதல் வீரராக உருவெடுத்துள்ளார்.

இதன் மூலம், ஈட்டி எறிதல் விளையாட்டு வரலாற்றில் உலகத் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த முதல் இலங்கையர் என்ற பெருமையையும், வரலாற்றுச் சாதனையையும் ருமேஷ் தரங்கப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *