Headlines

5 பேரின் படுகொலை வழக்கு: பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு ஒக்டோபர் 13 வரை விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 5 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகள் இருவரை எதிர்வரும் ஒக்டோபர் 13 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று (29) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, விளக்கமறியலில் உள்ள இரு சந்தேகநபர்கள் நேரில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், பிள்ளையான் காணொளித் தொழில்நுட்பம் ஊடாக மன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து மூவரையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதவான், இவ்வழக்கில் லண்டனில் தலைமறைவாக உள்ள பிரதான சந்தேகநபரான மொஹமட் பாய்ஸுக்கு எதிராக மீண்டும் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *