Headlines

5 மணித்தியால விசாரணைக்கு பின்னர் நாமல் ராஜபக்ஷ கைது – இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நடவடிக்கை

பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகள் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் நாமல் ராஜபக்ஷவுக்கு இன்று காலை அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த மகனான நாமல் ராஜபக்ஷ, ஆணைக்குழுவினால் எழுத்துப்பூர்வமாக விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய, இன்று (04) காலை அங்கு முன்னிலையாகியிருந்தார்.

இதன்போது, அவரிடம் 5 மணித்தியாலங்களுக்கும் மேலாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *