ஷிரான் பாசிக் தொடர்பான போதைப்பொருள் கடத்தல் விசாரணைகளுக்காக, தெஹிவளை – கல்கிஸ்ஸ முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்க மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு (CCID) இன்று வருகை தந்துள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவின் காவலில் உள்ள ஷிரான் பாசிக்கின் பிணையாளர் அல்லது அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் என்ற அடிப்படையில், அவரிடம் விளக்கம் கேட்பதற்காக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதற்கமைய, அவர் இன்று வாக்குமூலம் அளிப்பதற்காக ஆஜராகியுள்ளார்.
ஷிரான் பேசிக் வழக்கு; முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்க CCIB-யில் வாக்குமூலம்!
