கல்வி அமைச்சின் அறிவிப்புக்கமைய, அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்குமான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று (07) ஆரம்பமாகவுள்ளது.
பாடசாலைகளின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 2026 டிசம்பர் 04 ஆம் திகதியுடன் நிறைவடையும் என கல்வி அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதேவேளை, 2026 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் (G.C.E. O/L) பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் 8 ஆம் திகதி தொடக்கம் 17 ஆம் திகதி வரை திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் கல்வி அமைச்சு மேலதிகமாகத் தெரிவித்துள்ளது.
