தேசிய மக்கள் சக்தியின் (NPP) பொலன்னறுவை மாவட்ட விவசாயிகளின் பிரமாண்ட பேரணி இன்று (12) பிற்பகல் 4.00 மணிக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் நடைபெறவுள்ளது.
‘மக்களாட்சி – இரண்டு ஆண்டுகளின் பலம் – அனைவருக்குமான அபிவிருத்தி’ எனும் தொனிப்பொருளின் கீழ் நாடு தழுவிய ரீதியில் நடத்தப்பட்டு வரும் தொடர் மக்கள் பேரணிகளின் ஒரு அங்கமாகவே இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொலன்னறுவை தீப உயான (Deepa Uyana) வளாகத்தில் இன்று மாலை இந்தப் பேரணி நடைபெறவுள்ளதுடன், இதில் பொலன்னறுவை மாவட்டத்தைச் சேர்ந்த பெருமளவிலான விவசாயிகளும், பொதுமக்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
