Headlines

எயார்பஸ் மோசடி விவகாரம்: பி.பி. ஜயசுந்தரவிடம் 4 மணிநேரம் வாக்குமூலம் பதிவு!

எயார்பஸ் (Airbus) விமானக் கொள்வனவு தொடர்பான கொடுக்கல் வாங்கல்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் குறித்து, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு (CIABOC) விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இதன் ஒரு கட்டமாக, முன்னாள் திறைசேரி செயலாளரும், முன்னாள் ஜனாதிபதியின் செயலாளருமான கலாநிதி பி.பி. ஜயசுந்தரவிடம் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் வாக்குமூலமொன்றைப் பதிவு செய்துள்ளனர். நிக்கவெரெட்டியவில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்குச் சென்ற அதிகாரிகள் சுமார் நான்கு மணிநேரம் இந்த நீண்ட வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளின் ஒரு பகுதியாகவே, பி.பி. ஜயசுந்தரவின் இல்லத்திற்கு நேரடியாகச் சென்று அவரது வாக்குமூலத்தை அதிகாரிகள் பெற்றுக்கொண்டதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *