Headlines

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பாகிஸ்தான் பிரதமருடன் நியூயோர்க்கில் சந்திப்பு!

நியூயார்க்: ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீஃபை நேற்று (24) பிற்பகல் நியூயோர்க்கில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். நியூயோர்க்கில் உள்ள ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தி, இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடினர். இந்தச் சந்திப்பில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஜயந்த ஜயசூரிய ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்தச் சந்திப்பு, இருதரப்பு சர்வதேச உறவுகளை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *