2026 ஆம் ஆண்டுக்கான மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு, ஒளி-கட்டுப்பாட்டு அயன் சேனல்கள் (light-gated ion channels) மற்றும் ஒப்டோஜெனிடிக்ஸ் (optogenetics) பற்றிய ஆராய்ச்சிக்கு பங்களிப்புச் செய்த கார்ல் டீசெராத் (Karl Deisseroth), பீட்டர் ஹெஜெமான் (Peter Hegemann) மற்றும் ஜார்ஜ் நாஜெல் (Georg Nagel) ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளதாக நோபல் பரிசு வழங்கும் அமைப்பு திங்கட்கிழமை (05) அறிவித்துள்ளது.
இந்த ஆண்டுக்கான பரிசுத் தொகை 12 மில்லியன் சுவீடிய குரோனர் (சுமார் 1.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) ஆகும்.
மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு பெறுநர்களை சுவீடனின் கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் நோபல் சபை தேர்ந்தெடுக்கிறது. பல வெற்றியாளர்கள் இருக்கும் பட்சத்தில் 1.2 மில்லியன் டாலர் பரிசுத் தொகை இவர்களிடையே பகிர்ந்தளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
