26ஆம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க் நகருக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.
ஐக்கிய நாடுகளுடனான இலங்கையின் ஈடுபாடு குறித்துப் பேசிய அமைச்சர் ஹே
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் எதிர்வரும் கூட்டத்தொடரில் உரையாற்றத் திட்டமிட்டுள்ளார்.
எதிர்வரும் செப்டெம்பர் 28ஆம் திகதி, அவர் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த உயர்மட்ட அமர்வில் பங்கேற்பதற்காக, அமைச்சர் ஹேரத் செப்டெம்பர் 26ஆம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க் நகருக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.
ஐக்கிய நாடுகளுடனான இலங்கையின் ஈடுபாடு குறித்துப் பேசிய அமைச்சர் ஹேரத், கடந்த அமர்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரச தலைவராகக் கலந்து கொண்டதை நினைவு கூர்ந்தார். எவ்வாறாயினும், இம்முறை இலங்கையை வெளிவிவகார அமைச்சர் என்ற வகையில் தான் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
