ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பங்கேற்கும் மக்கள் பேரணிகளின் தொடர் இன்று (06) பிற்பகல் முதல் ஆரம்பமாகவுள்ளது.
“இரண்டு ஆண்டுகள் பலமாக… அனைவருக்கும் முன்னேற்றம்” (Two years strong. Progress for all.) என்ற கருப்பொருளின் கீழ் இந்தப் பொதுக் கூட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பேரணித் தொடரின் முதற்கட்டம் களுத்துறை மாவட்டத்தைக் மையமாகக் கொண்டு இன்று பிற்பகல் ஆரம்பமாகவுள்ளது.
இதற்கமைய, களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள மற்றும் பேருவளை ஆகிய பகுதிகளில் பேரணிகள் நடைபெறவுள்ளன. முதலாவது கூட்டம் பிற்பகல் 2.00 மணிக்கு புலத்சிங்களவிலும், அதனைத் தொடர்ந்து பிற்பகல் 3.30 மணிக்கு பேருவளையிலும் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
