Headlines

பலத்த மழை: 4 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு முன்னெச்சரிக்கை!

நாட்டில் நிலவும் பலத்த மழை காரணமாக, நான்கு மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நிலச்சரிவு ஆரம்ப கட்ட எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

இன்று (12) அதிகாலை 4:00 மணி முதல் நாளை (13) அதிகாலை 4:00 மணி வரை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு இந்த எச்சரிக்கை அமலில் இருக்கும் என NBRO தெரிவித்துள்ளது.

இதன்படி, பின்வரும் மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் மக்களுக்கு முதலாம் நிலை – “விழிப்புடன் இருங்கள்” (மஞ்சள் எச்சரிக்கை) நிலச்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன:

களுத்துறை மாவட்டம்: பாலிந்தநுவர

கண்டி மாவட்டம்: தொலுவ

நுவரெலியா மாவட்டம்: அம்பகமுவ

இரத்தினபுரி மாவட்டம்: பெல்மதுல்ல அயகம இரத்தினபுரி கொடகவெல கலவான நிவித்திகல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *