முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிராக பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (30) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே இவர்களுக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும், மேலதிக நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட ஆவணங்கள் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) ஏற்கனவே நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது.
இதற்கமைய, இந்த வழக்குத் தொடர்பான சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை நீதிமன்றத்திற்கு அறிவிப்பதற்காகவே, இந்த வழக்கை இன்று மீண்டும் விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார்.
