மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக நீதியரசர் மாயாதுன்ன கோரயா நியமிக்கப்பட்டுள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ரோஹந்த அபேசூரிய வெளிநாட்டுப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளமையினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அவர் எதிர்வரும் செப்டெம்பர் 24 ஆம் திகதி வரை வெளிநாட்டில் தங்கியிருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கமைய, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக நீதியரசர் மாயாதுன்ன கோரயா இன்று (21) ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த பதவிப்பிரமாண நிகழ்வு இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
