Headlines

வசதியான மற்றும் பாதுகாப்பான பொதுப் போக்குவரத்து! கொழும்பில் 104 மெட்ரோ பஸ்கள் நாளை முதல் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நிலவும் கடும் வாகன நெரிசலைக் குறைப்பதோடு, பொதுமக்களுக்கு மிகவும் வசதியான, பாதுகாப்பான மற்றும் தரமான பொதுப் போக்குவரத்துச் சேவையை வழங்கும் முக்கிய நோக்கத்துடன், மேல் மாகாணத்தின் 7 பிரதான மார்க்கங்கள் ஊடாக புதிதாக 104 ‘மெட்ரோ பஸ்கள்’ (Metro Buses) சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

இந்த அதிநவீன பஸ் சேவையை ஜனாதிபதி அவர்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

நாளை (29 ஆம் திகதி) முதல் குறித்த சேவைகளை ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ பஸ் தலைவர் எஸ்.எம்.யூ.பி. திலகவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.

வழமையான போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் பொதுமக்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களை கருத்திற்கொண்டு, அவர்கள் தமது பயணங்களை இலகுவாகவும், நேரத்திற்காகவும் மேற்கொள்ளும் வகையில் இந்த புதிய மெட்ரோ பஸ் சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் மேல் மாகாணத்தின் போக்குவரத்துத் துறையில் ஒரு முக்கிய மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *