Headlines

சட்டவிரோதமாக 80 மில்லியன் டொலர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியவர் மருதானையில் கைது!

2023 மற்றும் 2025 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் தந்திப் பணப்பரிமாற்றங்கள் (telegraphic transfers) ஊடாக சுமார் 80 மில்லியன் அமெரிக்க டொலர்களை (சுமார் 23 பில்லியன் ரூபா) வெளிநாட்டு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியதாகக் கூறப்படும் நபர் ஒருவர் மருதானையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை பொலிஸாரின் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (FCID) இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இரண்டு வருட காலப்பகுதியில் சந்தேகநபர் தந்திப் பணப்பரிமாற்ற பரிவர்த்தனைகள் மூலம் குறித்த நிதியை வெளிநாட்டு கணக்குகளுக்கு மாற்றியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வெளிநாடுகளுக்கு சந்தேகத்திற்குரிய வகையில் பணம் மாற்றப்பட்டமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் ஒரு பகுதியாகவே, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிதியின் மூலவளம், இந்தப் பரிவர்த்தனைகளுக்கான நோக்கம் மற்றும் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றங்களில் சம்பந்தப்பட்ட தரப்பினர் ஆகியோரைக் கண்டறிவதற்காக மேலதிக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *