Headlines

சிறைச்சாலையில் நாமல் ராஜபக்ஷ: பார்வையிடச் சென்றார் தாயார் ஷிரந்தி ராஜபக்ஷ!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினரும் தனது மகனுமான நாமல் ராஜபக்ஷவை பார்வையிடுவதற்காக முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ சிறைச்சாலைக்கு விஜயம் செய்துள்ளார்.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷவின் நலம் விசாரிப்பதற்காக அவர் சற்று முன்னர் சிறைச்சாலை வளாகத்தை வந்தடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே, அவரது தாயாரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியாருமான ஷிரந்தி ராஜபக்ஷ அங்கு சென்றுள்ளார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கடந்த சனிக்கிழமை (05) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பார்வையிடுவதற்காக வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *