Headlines

நீதிமன்ற உதவியாளருக்கு லஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டு: முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி விளக்கமறியலில்!

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் லஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் மனைவியான சினாரி லக்மந்தி ஹெட்டியாராச்சி, எதிர்வரும் ஒக்டோபர் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் மற்றும் சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளின் சமர்ப்பணங்களை ஆராய்ந்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பில் அவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையை விதிக்குமாறு நீதிபதியிடம் செல்வாக்கு செலுத்தும் நோக்கில், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் கடமையாற்றும் அலுவலக உதவியாளர் ஒருவருக்கு 50,000 ரூபாவை லஞ்சமாக வழங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *